தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தலைகீழாக இருக்கும் அறிவிப்பு பலகை

தலைகீழாக இருக்கும் அறிவிப்பு பலகை

தலைகீழாக இருக்கும் அறிவிப்பு பலகை


ADDED : ஜன 17, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறிவிப்பு பலகை துருப்பிடித்த நிலையில் தலைகீழாக உள்ளது.

முதுகுளத்துார் அருகே தேரிருவேலி போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு தேரிருவேலி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து காய்ச்சல், பாம்பு கடி உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைக்காகவும், கர்ப்பிணிகள் பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர்.

வளாகத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திட்டங்கள், சிகிச்சை முறை குறித்தும், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பலகை தலைகீழாகவும், துருப்பிடித்தும் உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதுபோன்று இருப்பது மக்கள் பேசும் பொருளாகவே இருக்கிறது.இதனை ஒழுங்குப்படுத்தி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us