/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.5000 லஞ்சம் வாங்கிய உரப்புளி தலையாரி கைது
/
ரூ.5000 லஞ்சம் வாங்கிய உரப்புளி தலையாரி கைது
ADDED : மே 03, 2025 01:45 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் லஞ்சம் வாங்கிய தலையாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
முதுகுளத்துார் தாலுகா காக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். 2 நாட்களுக்கு முன்பு உரப்புளி கிராம தலையாரி ராசையா 45, தனக்கும், வி.ஏ.ஓ.,விற்கும் ரூ.5000 லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து தலையாரிடம் வழங்க கூறி அனுப்பினர்.
பரமக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் தலையாரி ராசையாவிடம் பணத்தை கொடுத்தார். அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையாரியை கைது செய்தனர்.
மேலும் வி.ஏ.ஓ.,விற்கு இதில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.

