/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுனாமி வீடுகள் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
/
சுனாமி வீடுகள் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
சுனாமி வீடுகள் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
சுனாமி வீடுகள் மராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2024 05:43 AM

ராமநாதபுரம்: தங்கச்சிமடம் அரியாங்குண்டு கிராமத்தில் உள்ள சுனாமி வீடுகளை மாரமத்து செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மீனவ குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் கடல் தொழிலாளர் சங்கம் மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி, கண்வீனர் வில்லியம் ஜாய்சி முன்னிலையில் அரியாங்குண்டு கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அரியாங்குண்டில் 2011ல் 83 பேருக்கு இலவச சுனாமி வீடுகள் கட்டிக் கொடுத்தனர். 13 ஆண்டுகளாக பராமரிப்பின்றி வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளது. எனவே வீடுகளை மாரமத்து செய்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புதிதாக ரோடு அமைத்து தர வேண்டும். கிராமத்தில் சுனாமி வீடுகள் கிடைக்கப் பெறாத பல குடும்பங்களுக்கு கனவு இல்லம் திட்டத்தில் அரசு வீடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.