/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய கூட்டுறவு வங்கி கட்டடத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

ADDED : ஏப் 21, 2025 05:45 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கட்டடத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 50 சென்ட் இடம் ஒதுக்கி தர வேண்டும், என மத்திய கூட்டுறவுவங்கி பணியாளர்கள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொது செயலாளர் சர்வேசன் துவங்கிவைத்தார்.
கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் தமிழரசு பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் சுதந்திரகுமார் பங்கேற்றனர்.
இதில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி சுழற்சி ஏற்படும் விதத்தில் பணியிட மாறுதல் செய்ய வேண்டும். நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கட்டடத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 50 சென்ட் இடம் ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத்தலைவர் முருகன் நன்றி கூறினார்.