/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவுத்துறை மருந்தகங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
/
கூட்டுறவுத்துறை மருந்தகங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
கூட்டுறவுத்துறை மருந்தகங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
கூட்டுறவுத்துறை மருந்தகங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 08, 2025 02:07 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முதல்வர் மருந்தகங்களுக்கு தனியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த தமிழக கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு தின விழாவில் பங்கேற்ற விஜயராமலிங்கம் கூறியதாவது: கூட்டுறவுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பதவி உயர்வின் போது சொந்த மாவட்டத்திற்குள் ஊழியர்களை நியமிக்க வேண்டும். கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் அனைத்து வகை மருந்துகளும் கிடைக்க செய்ய வேண்டும். அங்கு கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். எனவே மருந்தகங்களுக்கு தனியாக நிரந்தர பணியாளர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும். கூட்டுறவு சார்பதிவாளர்களை பொறுப்பாக்குவதை தவிர்த்து தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
கூட்டுறவு சங்க தேர்தலின் போது போதிய பணியாளர்கள் இன்றி சிரமப்படுகின்றனர். தனியாக முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும். கூட்டுறவுத்துறை வழக்குகளை கண்காணித்து நடத்த தனியாக சி.எஸ்.ஆர்., நியமிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டுறவுத்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து தொடர்ந்து போராடி வருகிறோம். எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.