/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
/
தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2025 03:20 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. குறிப்பாக பரமக்குடி ரோடு, வாரச் சந்தை பகுதி, டி.டி.மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வளாகம், புல்லமடை ரோடு உள்ளிட்ட ரோடுகளில் நாய்கள் கூட்டமாக திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.
மேலும் ரோட்டில் திடீரென குறுக்கிடும் நாய்கள் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.