/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
/
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 09:34 AM

தொண்டி: தொண்டியில் மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக வீரர்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெறவும் தேவையான வசதிகள், பயிற்சியை அளிக்கவும், விளையாட்டு வீரர்களின் கனவை நனவாக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சட்டசபை தொகுதிகளில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதற்கான இடம் தேர்வு செய்ய உத்தரவிட்டதால் தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தொண்டி த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா கூறியதாவது:
தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓராண்டுக்கு முன்பு மினி ஸ்டேடியம் அமைக்க கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து இடம் தேர்வு செய்தனர். ஆனால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொண்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள்.
இங்கு மினி ஸ்டேடியம் அமையும் பட்சத்தில் பல்வேறு பிரிவு விளையாட்டுகளில் வெற்றியை குவிப்பார்கள்.
திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இளம் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.
எனவே பின் தங்கிய பகுதியான தொண்டியில் மினிஸ்டேடியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

