/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மா பூங்கா அருகே பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்
/
அம்மா பூங்கா அருகே பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்
அம்மா பூங்கா அருகே பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்
அம்மா பூங்கா அருகே பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2026 05:26 AM

ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் ஊராட்சி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அம்மா பூங்கா அருகே புதிதாக கட்டியுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அம்மா பூங்கா அருகே ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியுள்ளதால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.
இப்பகுதியில் வாரந்தோறும் புதனன்று வாரச்சந்தை நடக்கிறது. அப்போது வரும் வியாபாரிகள், பொது மக்கள், குறிப்பாக பெண்கள் கழிப்பறை வசதியின்றி சிரமப்படுகின்றனர்.
எனவே அம்மா பூங்கா அருகே புதிதாக கட்டியுள்ள கழிப்பறையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.