/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
60 வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
/
60 வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
60 வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
60 வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2025 05:05 AM
பரமக்குடி: பரமக்குடியில் இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் நடந்தது.
கடலாடி தாலுகா செயலாளர் சொரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர் ராஜன் முன்னிலை வகித்தனர்.
அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெயரை மாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்கள், கட்டட தொழிலாளர்கள் உட்பட உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து 60 வயது பூர்த்தி அடைந்து விண்ணப்பித்தும் ஒரு ஆண்டாக ஓய்வூதியம் வழங்காமல் உள்ளனர். மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.