/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களைக்கொல்லி பயன்பாடு குறைக்க வலியுறுத்தல்
/
களைக்கொல்லி பயன்பாடு குறைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 13, 2025 03:46 AM
ராமநாதபுரம்: பயிர் சாகுபடியில் களைக்கொல்லி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் நாரணமங்களத்தில் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான பயிற்சி நடந்தது. இதில் நாரணமங்களம் பஞ்சாயத்திலிருந்து 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வட்டார வேளாண் உதவி இயக்குநர் அம்பேத்குமார் வரவேற்றார். உதவி இயக்குநர் நாகராஜன் கூறியதாவது:
பயிர் சாகுபடியில் களைக்கொல்லி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மண் பரிசோதனை முடிவுகளின் படி தேவையான உரங்களை மட்டும் பயிர்களுக்கு அளிக்க வேண்டும் என்றார். துணை இயக்குநர் ராஜேந்திரன் பேசுகையில், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரவிதைகள் பயன்பாட்டின் நன்மைகள் குறித்து விளக்கினார். வேளாண் அறிவியல் நிலைய இணைப்பேராசிரியர் பாலாஜி ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், உழவன் செயலியின் பயன்பாடுகள், மண்மாதிரி சேகரிக்கும் முறை, பயிர்களுக்கு உரங்களை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.