/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி கடற்கரையில் குப்பை அகற்ற வலியுறுத்தல்
/
தொண்டி கடற்கரையில் குப்பை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 07:31 AM

தொண்டி: தொண்டி கடற்கரையில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை அப்புறபடுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொண்டி கடற்கரை ஓரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தினமும் அதிகாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி செல்வார்கள். குடியிருப்போர் கடற்கரை ஓரத்தில் குப்பையை கொட்டி விடுகின்றனர். இவை முறையாக அகற்றபடாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கடலில் கலப்பதால் துர்நாற்றமாக உள்ளது.
இது குறித்து மக்கள் கூறியதாவது- கடற்கரை பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மாடுகள், நாய்கள், பன்றிகள் கூட்டமாக சென்று தேங்கியுள்ள குப்பையில் கிடக்கும் உணவுக்காக கிளறிவிடுதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்றிட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.