/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கர தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
சக்கர தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 11:20 PM
தேவிபட்டினம்: தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவ பாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி களுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத் துவம்வாய்ந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் நவ பாஷாண கடலில் நீராடிய பின்னர் கடற்கரை எதிரே அமைந்துள்ள சக்கர தீர்த்த குளத்தில் நீராடு கின்றனர்.
இத்தகைய முக்கியத் துவம் வாய்ந்த இந்த குளத்தில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்படாததாலும், முறையாக சுத்தம் செய்யப் படாததாலும், மாசுபடிந்து தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி உள்ளதுடன் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த குளத்தில் நீராடும் பக்தர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சக்கர தீர்த்தகுளத்து நீரை ஆய்வு செய்து குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.