/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2024 03:15 AM

பரமக்குடி : -பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி அருகே சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி அரசு ஐ.டி.ஐ., அருகில் செயல்படுகிறது. ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கலைக்கல்லுாரிக்கும் செல்ல ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் ஒவ்வொரு முறை கன மழை பெய்யும் போதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது.ரோட்டில் கற்கள் பெயர்ந்துள்ளன.
காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக இயங்கும் இக்கல்லுாரியில் 3000 மாணவர்கள் படிக்கின்றனர். பேராசிரியர்கள் உட்பட பணியாளர்கள் பலர் உள்ளனர். ரோடு சேதம் குறித்தும், சீரமைக்க வலியுறுத்தி அரசு அதிகாரிகள் கல்லுாரிக்கு வரும் போது வேண்டுகோள் விடுகின்றனர்.
அந்த மேடையிலேயே சீர் செய்யப்படும் என தெரிவித்து கைதட்டல் வாங்குவதுடன் எந்த முன்னேற்பாடுகளும் இன்றி கைவிடப்படுவதாக கல்லுாரி மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆகவே மாணவர்கள் நலன் கருதி ரோட்டை உயர்த்தி சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.