/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
கோயில் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோயில் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோயில் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 17, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; கடலாடி அருகே மேலமுந்தல் தாழையடி ஏழு பிள்ளை காளியம்மன் கோயிலில் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மேலமுந்தல் ஊர் மக்கள் மனு அளித்தனர்.
அதில், தாழையடி ஏழு பிள்ளை காளியம்மன் கோயிலில் கருப்பண்ணசுவாமி, ஏழுபிள்ளை காளியம்மன் சிலையை மர்ம நபர்கள் வேண்டும் என்றே உடைத்துள்ளனர்.
இது தெய்வ குற்றமாகும். அவர்களை கண்டறிந்து உடன் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து கோயிலில் வழிபாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.