/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி ரோட்டில் பேரிகார்டு அமைப்பதற்கு வலியுறுத்தல்
/
தொண்டி ரோட்டில் பேரிகார்டு அமைப்பதற்கு வலியுறுத்தல்
தொண்டி ரோட்டில் பேரிகார்டு அமைப்பதற்கு வலியுறுத்தல்
தொண்டி ரோட்டில் பேரிகார்டு அமைப்பதற்கு வலியுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 05:07 AM
தொண்டி: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் பழயணக்கோட்டை அருகே வளைவு ரோடு உள்ளது.
திருவாடானையில் இருந்து தொண்டியை நோக்கி செல்லும் வாகனங்கள் வேகமாக செல்லும் போது வளைவு இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது.
இது குறித்து பழயணக்கோட்டை கிராம மக்கள் கூறியதாவது:
இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு கார் கவிழ்ந்து இரண்டு பேர் இறந்தனர். சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவில் தொண்டியை நோக்கி சென்ற ஒரு கார் கவிழ்ந்தது.
எனவே இந்த இடத்தில் விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டு வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.