/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலாந்தரவை கூட்டுறவு சங்கத்தில் பயிர்கடன் வழங்க வலியுறுத்தல்
/
வாலாந்தரவை கூட்டுறவு சங்கத்தில் பயிர்கடன் வழங்க வலியுறுத்தல்
வாலாந்தரவை கூட்டுறவு சங்கத்தில் பயிர்கடன் வழங்க வலியுறுத்தல்
வாலாந்தரவை கூட்டுறவு சங்கத்தில் பயிர்கடன் வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2024 07:14 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை வேளாண் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில், உரிய நேரத்தில் பயிர் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரத்தில் பருவமழை பெய்துள்ளதால் தற்போது நெல், மிளகாய், பருத்தி,சிறுதானியங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி வருகின்றனர். இதில் வாலாந்தரவை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்கடனுக்கு விண்ணப்பித்த விவசாயிகள் கடன் வழங்காமல் அலைகழிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வாலாந்தரவை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள நபர்ளுக்கு உடனடியாக கடன் வழங்கிட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.