/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருங்குடி நிழற் குடை சீரமைக்க வலியுறுத்தல்
/
கருங்குடி நிழற் குடை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2025 11:06 PM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் ரோட்டில் உள்ள கருங்குடி விலக்கு பஸ் ஸ்டாப் நிழற்குடை சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கிலிருந்து கூடலுார், ஆயங்குடி வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில், கருங்குடி விலக்கு பகுதியில், பயணிகள் நலன் கருதி பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிப்பு செய்யப்படாதன் விளைவாக, நிழற்குடையின் சிமென்ட் சிலாப்புகள், பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இதனால், வெயில் மழை காலங்களில் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆபத்தான நிழற்குடையை அகற்றி புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.