/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சிறுவர் பூங்கா சீரமைக்க வலியுறுத்தல்
/
பரமக்குடி சிறுவர் பூங்கா சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 02:38 AM
பரமக்குடி: பரமக்குடி சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியது. அக்கட்சி சார்பில் நகராட்சி கமிஷனர் முத்துச்சாமியிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் பரமக்குடி உழவர் சந்தை அருகில் சிறுவர் பூங்கா இயங்குகிறது. இங்கு நகராட்சி சார்பில் ஒரு நபருக்கு தலா ரூ.10 வீதம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை பெற்றுக் கொண்டு எவ்வித மேம்பாட்டு வசதியும் செய்யப்படாமல் இருக்கிறது. மேலும் விளையாட்டு உபகரணங்கள், சிறிய ராட்டினங்கள் என பழுதடைந்துள்ளன.
விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவில் அதிகளவில் குழந்தைகள் கூடுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

