/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
கருங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
கருங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
கருங்குளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2025 04:06 AM
ராமநாதபுரம் : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட கருங்குளம் கண்மாய் வரத்து கால்வாய் அடைப்பை சரிசெய்ய விவசாயிகள் வலியுறுத்தினர்.
லா.கருங்குளம், ஆணைகுடி, அச்சங்குடி விவசாயிகள் நீர்பாசன சங்கம் தலைவர் விஜயமுத்து, செயலாளர் ராமு, பொருளாளர் செல்வராஜ் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில், கருங்குளம் கண்மாய் பாசன நீரில் 250 ஏக்கரில் விவசாய ஆண்டுதோறும் நடக்கிறது. உத்தரகோசமங்கை மதுரை ரோடு விலக்கில் கருங்குளம் கண்மாய் வரத்து கால்வாய் கல்வெட்டு முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. கண்மாய்க்கு தண்ணீர் வருவது தடைப்பட்டுள்ளது. அடைப்பை சரிசெய்து மேற்கு- கிழக்கே 150 மீ., கான்கீரிட் கால்வாயாக மாற்ற வலியுறுத்தினர்.