/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கோட்டை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
கீழக்கோட்டை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2025 05:58 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே திருத்தேர்வளை ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டை, இந்திரா நகர், நாடார் கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோடு மண் ரோடாக உள்ளது. லேசான மழை பெய்தாலே ரோட்டை பயன்படுத்த முடியாத நிலையில் பாதிப்படைகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், மருத்துவ அவசர நேரங்களில் ரோட்டை காரணம் காட்டி ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களும் வர மறுக்கின்றனர்.
இதனால் முதியவர்களும், கர்ப்பிணிகளும் கடுமையாக பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.