ADDED : மார் 08, 2026 04:37 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர்களம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி களான செங்குடி, எட்டியதிடல், முத்துப்பட்டினம், சேத்திடல், புல்லமடை, வல்லமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
சாகுபடி செய்யப் பட்டுள்ள மிளகாய் செடிகள் மகசூல் நிலையை எட்டியுள்ள நிலையில், மிளகாய் பழங்கள் பறிக்கும் பணிகள் நடக் கின்றன.
அப்பகுதிகளில் மிளகாய் உலர் களங்கள் இல்லாததால் விவசாயிகள் மேடு, பள்ளங்களாக உள்ள விவசாய நிலங்களிலும், கண்மாய் பகுதிகளிலும், மிளகாய் பழங்களை வெயிலில் உலர்த்துவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் பழங்களை முறையாக உலர்த்த முடியாமலும் சிரமம் அடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாகுபடி பரப்பளவு அதிகம் உள்ள பகுதிகளில் மிளகாய் பழங்களை உலர்த்தும் வகையில் மிளகாய் உலர்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
