/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோப்பேரிமடம் - பனைக்குளம் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
/
கோப்பேரிமடம் - பனைக்குளம் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
கோப்பேரிமடம் - பனைக்குளம் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
கோப்பேரிமடம் - பனைக்குளம் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 27, 2025 05:44 AM
தேவிபட்டினம்:  தேவிபட்டினம் அருகே கோப்பேரி மடத்தில் இருந்து பனைக்குளம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தேவிபட்டினம் அருகே கோப்பேரி மடத்தில் இருந்து சித்தார் கோட்டை, புதுவலசை வழியாக பனைக்குளம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் பெரும்பாலான பகுதிகளில் ரோடு சேதம் அடைந்து ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் ரோட்டில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.