/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூடலுார் குடிநீர் ஊருணியை சுற்றி வேலி அமைக்க வலியுறுத்தல்
/
கூடலுார் குடிநீர் ஊருணியை சுற்றி வேலி அமைக்க வலியுறுத்தல்
கூடலுார் குடிநீர் ஊருணியை சுற்றி வேலி அமைக்க வலியுறுத்தல்
கூடலுார் குடிநீர் ஊருணியை சுற்றி வேலி அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 03:57 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலுாரில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அப்பகுதியினர் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கோயில் ஊருணியில் மழைக்காலத்தில் தண்ணீரை தேக்கி பல ஆண்டுகளாக குடிநீராக பயன் படுத்தி வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த கூடலுார் கோயில் ஊருணி பல ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாததாலும், ஊருணியை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்படாததாலும் ஊருணி நீரை கால்நடைகள் அசுத்தம் செய்கின்றன. இதனால் ஊருணி நீரை குடிநீராக பயன்படுத்தும் கிராமத்தினர் பாதிப்படைகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊருணியை சுற்றி கம்பி முள்வேலி அமைக்க கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.