/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துறைகளை ஒருங்கிணைப்பதை அரசு கைவிட வலியுறுத்தல்
/
துறைகளை ஒருங்கிணைப்பதை அரசு கைவிட வலியுறுத்தல்
ADDED : நவ 18, 2024 04:19 AM

ராமநாதபுரம்: '' பல துறைகளை ஒருங்கிணைப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்'' என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் எம்.ஞானத்தம்பி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த அரசு ஊழியர் சங்க மாநாட்டில் பங்கேற்ற அவர்கூறியதாவது: தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தவில்லை.
ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்து நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பல துறைகளை ஒருங்கிணைந்து இணைப்பதை நிறுத்த வேண்டும்.
சிறுசேமிப்பு, பென்ஷன் இயக்குநர் அலுவலகம், தகவல் தொகுப்பு மையத்தை கருவூலகத்துறையில் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கு பாதகமாக அமையும் என்பதால் இதனை உடனடியாக கைவிட வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் செய்வது 25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்ததை தற்போதைய அரசு 5 சதவீதமாக குறைத்துவிட்டது. பணிவாய்ப்புக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு செவி சாய்க்கவில்லை.
டிச., 13, 14 ல் துாத்துக்குடியில் நடக்கும் மாநில மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்றார்.