/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு தமிழக பண்ணை இறாலுக்கு சிக்கல்
/
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு தமிழக பண்ணை இறாலுக்கு சிக்கல்
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு தமிழக பண்ணை இறாலுக்கு சிக்கல்
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு தமிழக பண்ணை இறாலுக்கு சிக்கல்
ADDED : ஆக 29, 2025 05:38 AM

ராமேஸ்வரம்: அமெரிக்காவின் 50 சதவீதம் வரி விதிப்பால் தமிழகம், ஆந்திரா பண்ணை இறால் மீன்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கண்டித்த அமெரிக்கா இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது. தமிழகம், ஆந்திரா பண்ணையில் வளர்க்கப்படும் இறால் மீன்கள் 90 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது.
இந்த இறாலுக்கு ஏற்கனவே அமெரிக்கா 3 முதல் 6 சதவீதம் வரி விதித்த நிலையில் ஆக.,28 முதல் கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கிறது. இதனால் பண்ணை இறால் விலை வீழ்ச்சி அடையும். இச்சூழலில் தமிழகம், ஆந்திராவில் உள்ள 500க்கும் மேற்பட்ட பண்ணைகளில் பல டன் கணக்கில் வளரும் இறால்கள் ஏற்றுமதி ஆகாமல் பண்ணையிலே முடங்கி அழியும் அபாயம் உள்ளது.
இதனால் இறால் பண்ணை உரிமையாளர் களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். ஆனால் கடலில் மீனவர் வலையில் சிக்கும் இறால் விலையில் எந்த பாதிப்பும் இல்லை என ஏற்றுமதி வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் இறால் மீன் வியாபாரி நாகேஸ்வரன் கூறுகையில், ''கடலில் வாழும் பிளவர் இறாலுக்கு ருசி அதிகம் என்பதால் ஆசிய நாடுகளில் கிராக்கி அதிகம். இந்த இறால்கள் 90 சதவீதம் ஜப்பான் செல்வதால் விலையில் பாதிப்பு இருக்காது. பண்ணை இறால்களுக்கு தான் விலை வீழ்ச்சி ஏற்படும்,'' என்றார்.
பண்ணை உரிமையாளர்கள் தரப்பில்,'பண்ணைகளில் வளரும் இறால்களை வளர்த்து பிடித்து சுத்தப்படுத்தி ஏற்றுமதி செய்ய கூடுதல் செலவாகிறது. ஏற்றுமதி செய்வதால் இந்த செலவுகளை ஈடுகட்ட முடியும். எனவே அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு ஏற்படுத்தும் தாக்கம் வரும் நாட்களில் தான் தெரியும். 50 சதவீத வரிவிதிப்பு தொடரும்பட்சத்தில் தொழிலை கைவிடுவதை தவிர வேறுவழியில்லை,' என தெரிவிக்கப்பட்டது.