ADDED : ஜூன் 03, 2026 05:00 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் டவுன் அரண்மனை பகுதிக்கு ஏராளமான வியாபாரிகள், மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக தெற்கு தெரு சந்தில் ரூ. பல லட்சத்தில் சிறுநீர் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிந்தும் தண்ணீர் பிரச்னையால் பல மாதங்களாக திறக்கப்படாமலும், கதவுகள் இன்றி உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கதவு, தண்ணீர் வசதி செய்து புதிய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.--------
