/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை நான்கு ரத வீதியில் பயனற்ற வாறுகால் கழிவு நீரை வெளியேற்றலாமே
/
உத்தரகோசமங்கை நான்கு ரத வீதியில் பயனற்ற வாறுகால் கழிவு நீரை வெளியேற்றலாமே
உத்தரகோசமங்கை நான்கு ரத வீதியில் பயனற்ற வாறுகால் கழிவு நீரை வெளியேற்றலாமே
உத்தரகோசமங்கை நான்கு ரத வீதியில் பயனற்ற வாறுகால் கழிவு நீரை வெளியேற்றலாமே
ADDED : நவ 07, 2024 01:42 AM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை ஊராட்சிக்கு உட்பட்ட நான்கு ரத வீதிகளிலும் மழைநீர் சேகரிப்பு வாறுகால் பயனற்ற நிலையில் உள்ளது.
கடந்த 2021ல் ரூ.1 கோடியே 75 லட்சத்தில்உத்தரகோசமங்கை கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழை நீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்பட்டது. வாறுகால்வாயின் மேற்பகுதியில் அனைத்து பகுதிகளிலும் சிமென்ட் ஸ்லாப் மூடியிடப்பட்டுள்ளது.
தற்போது அவற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலக்கிறது. இந்நிலையில் நாலாபுறமும் சூழ்ந்துள்ள கழிவுநீர் செல்வதற்கு எவ்வித வடிகால் வசதியும் இல்லாததால் வருடக்கணக்கில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது.
உத்தரகோசமங்கை பொதுமக்கள் கூறியதாவது:
உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் உள்ள மழைநீர் வாறுகால் மற்றும் கழிவுநீர் செல்லும்வாறுகால் வெளியே செல்வதற்கான வழியின்றி துார்ந்து போய் உள்ளது. ஆண்டுக்கணக்கில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் மற்றும் லார்வா புழுக்கள் உற்பத்தியாகி பகலிலும் இரவிலும் கொசுக்கள் கடிக்கிறது. கழிவு நீரை வெளியேற்ற எவ்வித திட்டமிடுதலும் இல்லை.
எனவே கழிவு நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்புறம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.
எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நிதி நிதி ஒதுக்கீடு செய்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என்றனர்.