/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கவுரி அம்மன் கோயிலில் உற்ஸவசாந்தி கவுரி நோன்பு நிறைவு
/
பரமக்குடி கவுரி அம்மன் கோயிலில் உற்ஸவசாந்தி கவுரி நோன்பு நிறைவு
பரமக்குடி கவுரி அம்மன் கோயிலில் உற்ஸவசாந்தி கவுரி நோன்பு நிறைவு
பரமக்குடி கவுரி அம்மன் கோயிலில் உற்ஸவசாந்தி கவுரி நோன்பு நிறைவு
ADDED : நவ 05, 2024 05:03 AM

பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயிலில் ஐப்பசி மாத கவுரி நோன்பு விழா நடந்தது.
அக்.31ல் தீபாவளி பண்டிகை மற்றும் கவுரி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு நோன்பு உற்ஸவம் துவங்கியது. தினமும் அம்மன் சிவலிங்க பூஜை, கோலாட்ட லீலை, ரிஷப வாகனம் மற்றும் அம்பாள்ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தார்.
நேற்று 5ம் நாள் விழாவாக காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் காலை 11:00 மணி தொடங்கி பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்ஸவ சாந்தி நிறைவடைந்தது. மேலும் இரவு 7:00 மணிக்கு அம்பாள் சயன திருக்கோலத்தில் பட்டுப் பல்லக்கில் திருவீதி உலா வந்தார்.
ஏற்பாடுகளை தெலுங்கு விஷ்வ பிராமண மகாசபையினர் செய்தனர்.