/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கிழக்கு பிரகாரவீதி ரோடு சேதம்: பக்தர்கள் அவதி
/
உத்தரகோசமங்கை கிழக்கு பிரகாரவீதி ரோடு சேதம்: பக்தர்கள் அவதி
உத்தரகோசமங்கை கிழக்கு பிரகாரவீதி ரோடு சேதம்: பக்தர்கள் அவதி
உத்தரகோசமங்கை கிழக்கு பிரகாரவீதி ரோடு சேதம்: பக்தர்கள் அவதி
ADDED : அக் 16, 2024 05:51 AM

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் கோயில் கிழக்கு பிரகார வீதி ரோடு சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். கடந்த ஆண்டு ஆருத்ரா தரிசன நேரத்தில் அம்மன் சன்னதி ராஜகோபுரம் முன்பாக செல்லும் கிழக்கு பிரகாரம் வீதியில் ரோடு சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் வெறுங்காலில் நடந்து செல்லும் போது ஜல்லிக்கற்கள் குத்துவதால் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து தற்காலிகமாக ரோடு சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜகோபுரம் வழியாக செல்லும் கிழக்கு பிரகார வீதி சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் கூறியதாவது:
பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரோட்டை முறையாக சீரமைத்து புதிய தார் ரோடு அமைக்க வேண்டும். பார்க்கிங் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்துவதற்கு வழி செய்ய வேண்டும்.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் போக்குவரத்து இட நெருக்கடியால் சிரமத்தை சந்திக்கின்றன. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்வர வேண்டும் என்றனர்.