/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் முழுவீச்சில் திருப்பணிகள் ஏப்ரலில் கும்பாபிேஷகம் நடத்த திட்டம்

ADDED : நவ 08, 2024 02:25 AM

ராமநாதபுரம்:உலகின் முதல் சிவன் கோயில் என்றழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. ஏப்ரலில் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் கும்பாபிேஷக திருப்பணிகள் கடந்தாண்டு முதல் நடக்கிறது.
கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், அம்மன், சுவாமி சன்னதிகள், ராஜகோபுரம் உள்ளிட்டவைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. பிரகாரத்தில் மணல், சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் போன்ற பொருட்களை அரைத்து அக்கால முறைப்படி கட்டுமானப்பணிகள் நடந்துள்ளது.
மகாமண்டபம், திருக்கல்யாண மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ள பஞ்சவர்ணங்களில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. துாண்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மங்களநாதர் சுவாமி சுற்றுப் பிரகாரத்தில் 3 அடி வரை ஆழம் தோண்டி நடை பாதை அமைக்கப்படுகிறது.
பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரலில் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். திருப்பணிகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.