/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை சிவன் கோயில் ரோடு சேதம்: பக்தர்கள் பாதிப்பு
/
உத்தரகோசமங்கை சிவன் கோயில் ரோடு சேதம்: பக்தர்கள் பாதிப்பு
உத்தரகோசமங்கை சிவன் கோயில் ரோடு சேதம்: பக்தர்கள் பாதிப்பு
உத்தரகோசமங்கை சிவன் கோயில் ரோடு சேதம்: பக்தர்கள் பாதிப்பு
ADDED : நவ 08, 2024 04:14 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை சிவன் கோயில் அருகே ரோடு சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமாக உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் திகழ்கிறது.
இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோயில் அருகே ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களும் காயமடைகின்றனர்.
எனவே புதிதாக ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.