ADDED : செப் 02, 2026 04:41 PM
ராமநாதபுரம்: பருவமழைக் காலம் துவங்கும் முன் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என கால்நடை அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகள், செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் கிராமங்கள் தோறும் சென்று சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆடு, மாடுகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துமாறு கால்நடை அலுவலர்கள் அறிவுறுத்தினர். கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:
வெள்ளாடுகளை பல்வேறு நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி நோய்கள் தாக்குகின்றன. இந்நோய்கள் வராமல் தடுக்க ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி செலுத்த வேண்டும். குறிப்பாக துள்ளுமாரி, கோமாரி, தொண்டை அடைப்பான், ஆட்டம்மை உள்ளிட்ட நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி அவசியம். பருவமழைக் காலங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு நோய் பரவும் அபாயம் அதிகம். அதனால் மழைக்காலம் துவங்கும் முன் தடுப்பூசி செலுத்துவது நல்லது என்றனர். –––
