/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் வடமாடு விழா
/
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் வடமாடு விழா
ADDED : ஆக 19, 2025 07:48 AM

கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு விழா நடந்தது.
பாமா, ருக்மணி சமேத கண்ணபிரானுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் அருகே உள்ள திடலில் வடமாடு விழா நடந்தது.
ராமநாதபுரம், சிவகங்கை, சிராவயல், மதுரை, விருதுநகர், காரைக்குடி ஆகிய இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
உரலில் ஒரு புறத்தில் பள்ளம் தோண்டி மூடப்பட்டு மறுபுறத்தில்15 அடி நீளமுள்ள கயிற்றில் காளையின் கழுத்தில் கட்டப்பட்டது. ஒரு குழுவிற்கு 8 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
20 நிமிடங்கள் ஆட்ட நேரம் அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் பிடிபடாத காளைகளுக்கு காளை உரிமையாளர்களுக்கு பரிசு பொருள்களும், காளையைப் பிடித்த வீரர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி பாராட்டப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் யாதவ சங்கம், கிராம பொதுமக்கள் செய்தனர்.

