/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவுநீர் கலப்பு, மணல் திருட்டால் வைகை ஆற்றின் வழித்தடம் மாயம்! பிளாஸ்டிக் குப்பையால் நீரூற்றுக்கும் சிக்கல்

ADDED : செப் 01, 2024 11:49 PM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் மணல் திருட்டு, கழிவுநீர் கலப்பு ஆகிய காரணங்களால் நீர்செல்லும் பாதை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. இங்கு பிளாஸ்டிக் குப்பையை உண்ணும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்துள்ளது.
பரமக்குடி நகர் வைகை ஆற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் அரசு குவாரிகள் அமைத்ததால் கட்டாந்தரை ஆகியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த கழிவு நீரும் ஆற்றில் கலப்பதால் புற்கள் முளைத்து ஆறு தன் நிலையை இழந்துள்ளது.
தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு நகரில் அதிகளவில் உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வீசப்படும் குப்பை மற்றும் நகராட்சி குப்பையை இங்கு கொட்டி அள்ளும் போது ஒட்டுமொத்தமாக காற்றில் பிளாஸ்டிக் பரவுகிறது. இந்நிலையில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தும் நிலை உள்ளது.
கால்நடைகளின் கழிவுகளால் சீமைக்கருவேல மரங்கள் உட்பட அதிகமான பயனற்ற மரங்கள் வளர்கின்றன. இச்சூழலில் கால்நடைகள் புற்களை மேய்வதுடன் பிளாஸ்டிக் கவர்களில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது பிளாஸ்டிக்கை சேர்த்து உண்பதால் ஆபத்து ஏற்படுகிறது.
மேலும் ஒட்டுமொத்த நீராதாரமாக உள்ள வைகை ஆற்றில் பிளாஸ்டிக் பரவுவதால் நீரூற்றுக்கும் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே வைகை ஆற்றை பாதுகாக்கும் வகையில் நகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய், கனிம வளத்துறைகளை உள்ளடக்கி மாவட்ட நிர்வாகம் துாய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
----