/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய்க்கு வைகை நீர்; கோடை விவசாயிகள் வலியுறுத்தல்
/
பெரிய கண்மாய்க்கு வைகை நீர்; கோடை விவசாயிகள் வலியுறுத்தல்
பெரிய கண்மாய்க்கு வைகை நீர்; கோடை விவசாயிகள் வலியுறுத்தல்
பெரிய கண்மாய்க்கு வைகை நீர்; கோடை விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 26, 2025 10:41 PM
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை நெல் விவசாயத்தை காப்பாற்ற வைகை நீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஜூன் 25 முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏழு நாட்கள் 1251 மில்லியன் கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நாளில் 3000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மற்ற நாட்களில் படிப்படியாக நீரின் அளவு குறைக்கப்பட்டு ஏழு நாட்களுக்கு பிறகு வைகை அணையில் தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டுள்ள நிலையில் திறக்கப்பட்டுள்ள வைகை நீரை முறையாக கண்மாய்களில் தேக்கி நிலத்தடி நீர் ஆதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் கீழ் ஏராளமான விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் முழுமையான நெல் சாகுபடி பெற முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே வைகையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீரை ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதன் மூலம் விவசாயிகள் பயனடைவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.