/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகாசி அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

ADDED : மே 27, 2025 04:32 AM

ராமேஸ்வரம் : வைகாசி அமாவாசையான நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர்.
பின் அக்னி தீர்த்தத்தில் 'சிவ சிவ' என முழங்கியபடி புனித நீராடினர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர்.
சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை நெரிசல் ஏற்பட்டது.