/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாஜ்பாய் நுாறாவது பிறந்த நாள் விழா
/
வாஜ்பாய் நுாறாவது பிறந்த நாள் விழா
ADDED : டிச 26, 2024 04:43 AM

ராமநாதபுரம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாறாவது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் ராமநாதபுரம் கேணிக்கரை சந்திப்பில் கொண்டாடப்பட்டது.
கட்சி நிர்வாகி சுப.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், நகராட்சி கவுன்சிலர் குமார், நகர தலைவர் கார்த்திகேயன், மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாகு, ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் குமரன், வர்த்தகப்பிரிவு மாவட்டத்தலைவர் பாலமுருகன், ஆன்மிக பிரிவு மாவட்டத்தலைவர் பழனிக்குமார், அரசு தொடர்பு செயலாளர் கருப்பையா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.