ADDED : டிச 27, 2024 04:45 AM
சாயல்குடி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாறாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சாயல்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு மூக்கையூர் ரோடு விலக்கில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட விவசாய அணி ஊடகப்பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நாகூர் பாண்டியன், கடலாடி ஒன்றிய பொதுச்செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
* ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பழங்கோட்டை பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் சசிகனி தலைமையில் கொண்டாடப்பட்டது.
பா.ஜ., கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய துணைத் தலைவர்கள் வடிவேலன், ஹரி ராமபாண்டியன், சக்தி கேந்திர பொறுப்பாளர் பால்கரசு, பட்டியல் அணி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கிளைத் தலைவர்கள் வீரபாண்டியன், ராஜன், ஞானசிவம், முருகேசன், முத்து கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.