/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிநோக்கம், அடஞ்சேரி ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் முட்டைகள் பாதுகாப்பு! மன்னார் வளைகுடி கடற்கரையில் வனத்துறை நடவடிக்கை

ADDED : ஜன 30, 2024 11:30 PM
வாலிநோக்கம் : தனுஷ்கோடி முதல் சாயல்குடி அருகே ரோஜ்மா நகர் வரை மன்னார் வளைகுடா கடற்கரை அமைந்துள்ளது. 135 கி.மீ., மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியில் டிச., முதல் பிப்., வரை கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிடுவதற்காக வர உள்ளதால் வாலிநோக்கம், அடஞ்சேரி ஆமைக்குஞ்சு பொறிப்பகங்களில் வனத்துறையினர் முட்டைகளை சேகரித்து வருகின்றனர்.
மனிதர்களாலும், விலங்குகளாலும் ஆமை முட்டைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்வு செய்து அதில் இரண்டு அடி ஆழத்திற்கு குழி பறித்து அவற்றில் 150 முதல் 60 எண்ணிக்கையில் ஆமைகள் முட்டைகள் இடுகின்றன. 40 முதல் 48 நாட்களுக்குப் பிறகு முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் நீந்தி கடலுக்கு செல்கின்றன.
வாலிநோக்கத்தில் இரண்டு ஆமை முட்டை குஞ்சுகள் பொரிப்பகமும், ஏர்வாடி அருகே அடஞ்சேரி பகுதியில் ஒரு ஆமை முட்டைகள் குஞ்சு பொரிப்பகம் செயல்படுகிறது.
கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகம்சார்பில் அலுவலர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஏழு இடங்களில் ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
கடலின் தகவமைப்பில் முக்கிய பங்காற்றுவது ஆமைகள் தான்.
ஆலிவர் ட்ரீ எனப்படும் சிற்றாமைகள் இங்கு முட்டையிட்டு செல்கின்றன. 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பின் முட்டையிலிருந்து ஆமைக்குஞ்சுகள் வெளியேறி மீண்டும் தனது நுண்ணுணர்வு சக்தியால் ஈர்க்கப்பட்டு அதே இடத்தில் தாய் ஆமையாக வந்து முட்டையிட்டு செல்லும் வழக்கம் கொண்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பிப்., மாதத்தில் குஞ்சுகள் பொறிக்கப்பட்டு அவற்றை மன்னார் வளைகுடா கடலில் பாதுகாப்பான முறையில் ஆமைக்குஞ்சுகள் கடலுக்குள் விடப்படும் நிகழ்வு நடத்தப்பட உள்ளது.
---