/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் வல்லக்குளம் சாலை; கண்டுகொள்ளாத தனி அலுவலர்கள்

ADDED : ஜூலை 31, 2025 11:04 PM
சிக்கல்; சிக்கல் அருகே சொக்கனை ஊராட்சி வல்லக்குளத்தில் 20 ஆண்டுகளாக சேத மடைந்த சாலையில் பொதுமக்கள் பயணிக் கின்றனர்.
சிக்கல் -தேரிருவேலி செல்லும் விலக்கில் வல்லக்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை 2 கி.மீ., உள்ளது. 2005ல் அமைக்கப்பட்ட சாலை தற்போது வரை எவ்வித புதிய தார் சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் சாலையை பயன்படுத்தக்கூடிய வல்லக்குளம் கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இச்சாலையின் வழியாக பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லக்கூடிய மாண வர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கடலாடி யூனியன் நிர்வாகத்தினர் 20 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலையை ஆய்வு செய்து புதிய சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிராமங்கள் தோறும் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு ஆர்வம் காட்டும் நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.