ADDED : மார் 24, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே முள்ளிமுனை அரசு நடுநிலைப்பள்ளி முன்புள்ள மின்கம்பத்தில் வேன் மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது.
தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி முன்புள்ள மின்கம்பத்தில் நேற்று முன்தினம் அந்த பக்கமாக சென்ற வேன் மோதியது. இதில் சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்துள்ளது. உடனடியாக மின் விநியோகம் துண்டிக்கபட்டது. ஆனால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணி நடக்கவில்லை. மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.