ADDED : ஏப் 14, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் சோலார் ஸ்மார்ட் டி.வி., துவக்க விழா நடந்தது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் 100 நாள் சவால் 100 சதவீதம் மாணவர்கள் வாசிப்பு திறனில் பள்ளியின் சாதனையை பாராட்டினார். வட்டார கல்வி அலுவலர் உஷாராணி சோலார் ஸ்மார்ட் டி.வி.,யை துவக்கி வைத்தார்.
ஆண்டு விழாவிற்கு தலைமையாசிரியர் ஜெயசுதா தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் உஷாராணி, ஜெயா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி, ஆசிரியைகள் சத்திய பகவதி, திவ்யா, மரிய செபஸ்டின், கவிதா, மகாலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.