/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 14, 2025 07:10 AM

பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பெரியபட்டினம் சுகாதார நிலைய டாக்டர் விசாலாட்சி முன்னிலை வகித்தார். தாளாளர் பாண்டி வரவேற்றார். முதல்வர் உமாராணி ஆண்டறிக்கை வாசித்தார்.
நிர்வாக அலுவலர் கதிரேசன், டாக்டர் ரிஹானா நதிரா, திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களின் சிலம்பம், யோகாசனம், கராத்தே, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.