/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாய நிலம் டிஜிட்டல் முறை ஆய்வில் நிர்வாக சிக்கல் வி.ஏ.ஓ.,க்கள் குற்றச்சாட்டு
/
விவசாய நிலம் டிஜிட்டல் முறை ஆய்வில் நிர்வாக சிக்கல் வி.ஏ.ஓ.,க்கள் குற்றச்சாட்டு
விவசாய நிலம் டிஜிட்டல் முறை ஆய்வில் நிர்வாக சிக்கல் வி.ஏ.ஓ.,க்கள் குற்றச்சாட்டு
விவசாய நிலம் டிஜிட்டல் முறை ஆய்வில் நிர்வாக சிக்கல் வி.ஏ.ஓ.,க்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜன 20, 2024 04:20 AM
திருவாடானை: விவசாய நிலங்களில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பளவை ஆய்வு செய்யும் பணிகளில் வி.ஏ.ஓ., க்கள் ஈடுபட்டுள்ளனர். நிர்வாக சிக்கலால் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாக வி.ஏ.ஓ.,க்கள் குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் பயிர் சாகுபடி பரப்பளவை துல்லியமாக ஆவணப்படுத்தும் வகையில் டிஜிட்டல் சர்வே திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சாகுபடி பரப்பின் அளவை துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.
மேலும் பல்வேறு பருவங்களில் விளைவிக்கபடும் பயிர் விவசாய முறைகளை அறிந்து அதற்கேற்ப பயிர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது. இப் பணிகளில் வி.ஏ.ஓ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நிர்வாக சிக்கல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
வி.ஏ.ஓ., சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நம்புராஜேஸ் கூறியதாவது: ஆண்டிற்கு நான்கு முறை சர்வே பணியை மேற்கொள்ள வேண்டும். ஜூலையில் விதைத்தல், அக்.,ல் சாகுபடி, ஜன.,ல் அறுவடை, ஏப்.,ல் இரண்டாம் போக சாகுபடி என ஆண்டிற்கு நான்கு முறை சர்வே பணி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் சில குறைகள் உள்ளன.
ஏற்கனவே பணிச்சுமை அதிகம் என்ற நிலையில் இப்பணியை மேற்கொள்வது கடினம் என வருவாய் நிர்வாக ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் வி.ஏ.ஓ.,க்களுக்கு துணையாக வெளிநபரை தேர்வு செய்து கொள்ளலாம்.
அவர்கள் மேற்கொள்ளும் பணிக்கு மதிப்பூதியம் கணக்கிட்டு வழங்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை மதிப்பூதியம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால் வெளிநபரை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
இப்பணியால் வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பல்வேறு வேலையாக எங்களை தேடி வருபவர்கள் அலுவலகம் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.