ADDED : மார் 02, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ., சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் சண்முகவேல், செயலாளர் பழனி,
பொருளாளர் தனவேந்தன் முன்னிலை வகித்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கக் கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட 41 வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.

