/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வி.சி.க., நிர்வாக சீரமைப்பு கூட்டம்
/
வி.சி.க., நிர்வாக சீரமைப்பு கூட்டம்
ADDED : நவ 22, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட வி.சி.க., நிர்வாக மறு சீரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், துணை நிலை அமைப்புகளின் பொறுப்புகளுக்கான விண்ணப்ப படிவம் பெறுதல், வழங்குதல் நிகழ்ச்சி ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்தது.
மாவட்ட செயலாளர் அற்புதக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர்கள் செய்யது யாசின், சுப்பிரமணியன், மீரான் முகைதீன் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் விடுதலை சேகரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை நன்றி கூறினார்.
பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு புதிய பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்தனர்.