ADDED : நவ 12, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு நாள் அரசியல் பயிலரங்கம் ராமநாதபுரத்தில் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ரமே.பிரபாகரன் தலைமை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசின், சுப்பிரமணியன், மீரான் முகைதீன், கருப்பசாமி, மனோகரன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர்கள் திலகவதி, ரேகா, மாவட்ட துணை செயலாளர் புவனா, பாக்கியஜோதி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை வரவேற்றார்.
விடுதலை சிறுத்தைகள்கட்சியின் தொடக்கமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன், கட்சியின் நிர்வாகம், 2026 நோக்கி நமது களப்பணி என்ற தலைப்பில் முதன்மை செயலாளர் பாவரசு பயிற்சியளித்தனர்.
மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.