/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகனங்களில் புகை பரிசோதனை மோசடி
/
வாகனங்களில் புகை பரிசோதனை மோசடி
ADDED : ஆக 06, 2025 08:41 AM
ராமநாதபுரம்: தமிழக வாகனங்களுக்கு பஞ்சாப், ஹரியாாவில் வாகன புகை பரிசோதனை செய்ததாக போலி சான்றிதழ் வழங்கப்படுவதை தடுக்க வேண்டும் என ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் வாகன புகை பரிசோதனை மையங்களின் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன் கூறியதாவது:
வாகனங்களின் இயங்கும் தன்மையை உறுதி செய்ய புகை பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெராக்ஸ் மையத்தில் வாகனத்தின் முன்பகுதியை படம் எடுத்து உத்திரபிரதேசத்திலும், ஹரியானாவிலும் பரிசோதனை செய்தது போல் சான்றிதழ் உருவாக்குகின்றனர்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இந்த மோசடியை தெரிவித்தால் ஆவணங்கள் சரியாக உள்ளது. அதனால் உரிமம் வழங்குகிறோம் என்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி வாகன புகை பரிசோதனை மையம் நடத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இந்த முறைகேட்டை அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் போலி சான்றிதழ் வழங்கும் மையங்கள் தமிழ்நாடு முழுவதும் உருவாகி வருகிறது. அரசு அதிகாரிகள் சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்து வாகனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்றார்.

