/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி காந்தி சிலை ரோட்டில் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்
/
பரமக்குடி காந்தி சிலை ரோட்டில் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்
பரமக்குடி காந்தி சிலை ரோட்டில் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்
பரமக்குடி காந்தி சிலை ரோட்டில் ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்
ADDED : அக் 21, 2024 04:46 AM
பரமக்குடி: பரமக்குடி ஆர்ச் துவங்கி காந்தி சிலை ரோட்டில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பரமக்குடி நகராட்சியில் பிரதான வழித்தடமாக காந்தி சிலை ரோடு உள்ளது. இதன் அருகில் ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் என இறங்கி வரும் மக்கள், ஆர்ச் வழியாக நகருக்குள் செல்ல முடியும். பெரிய பஜார் உட்பட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மகால்கள் என செல்வதற்கு இந்த வழித்தடம் முக்கியமாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு முறை மழை பெய்யும் நேரங்களிலும் இந்த ரோட்டில் முழங்கால் வரை தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் 50 அடி வரை அகலம் கொண்ட ரோட்டில் நாள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் டூவீலர், ஆட்டோ, கார்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலையில் பாதசாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பள்ளி துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் இதன் வழியாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை சீரமைக்க போக்குவரத்து மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

