/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு
/
நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு
நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு
நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு
ADDED : மே 06, 2025 06:14 AM
திருவாடானை: திருவாடானை தாலுகா நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.
தமிழகத்தில் நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளுக்காக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் திருவாடானை தாலுகாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகள் நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது.
இப் பணிகளுக்காக 20 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடுவார்கள். மங்களக்குடி, திருவெற்றியூர், குருந்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனித்தனி குழுவாக பிரிந்து நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு 7 நாட்கள் நடக்கிறது.
திருவாடானை நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் லெட்சுமணன் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த கணக்கெடுப்பு மூலம் வாகன போக்குவரத்து எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.